விசேட பாதுகாப்பு தேவையில்லை; மக்கள் பாதுகாப்பார்கள்: கோத்தா! - sonakar.com

Post Top Ad

Wednesday 26 September 2018

விசேட பாதுகாப்பு தேவையில்லை; மக்கள் பாதுகாப்பார்கள்: கோத்தா!


பிரபாகரன் உயிரோடு இருந்த போதிலிருந்து எப்போதுமே தமக்கு உயிரச்சுறுத்தல் இருந்து வந்ததாக தெரிவிக்கின்ற கோத்தபாய ராஜபக்ச தான் விசேட பாதுகாப்பு எதையும் கோரவில்லையென தெரிவித்துள்ளார்.


கோத்தா - மைத்ரியைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்ததையடுத்து கோத்தபாயவின் பாதுகாப்பு குறித்து கருத்து வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தம்மை மக்கள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் எந்தவொரு விசேட பாதுகாப்பையும் தான் கேட்கவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment