எனக்கு மரண தண்டனை வழங்கி கொன்று விடுங்கள்: ஞானசார! - sonakar.com

Post Top Ad

Sunday 16 September 2018

எனக்கு மரண தண்டனை வழங்கி கொன்று விடுங்கள்: ஞானசார!


சிறையிலடைக்கப்பட்டிருக்கும் ஞானசார தனக்கு மரண தண்டனை வழங்கிக் கொன்று விடுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.


2010 - 2017 வரை மிக மோசமான முறையில் இனங்களுக்கிடையிலான வன்முறை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு இனவாதிகள் மத்தியில் புகழமைந்த ஞானசார, நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையிலேயே, தான் நாட்டுக்காகவும் மக்களுக்குமாகவே பேசி வந்ததாகவும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக இலங்கையில் இடம்பெறும் மதமாற்றம் உட்பட்ட விடயங்கள் தொடர்பிலேயே குரல் கொடுத்து வந்ததாகவம் இன்று தனக்கு நிகழ்ந்திருக்கும் அநீதிக்குப் பதிலாகத் தனக்கு மரண தண்டனை வழங்கி கொன்று விடுவது மேல் எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக திவயின தெரிவிக்கிறது.

எனினும், இக்கடிதம் ஞானசார சிறை செல்ல முன்பாகவா, பின்னரா எழுதினார் என்பது உறுதிபடத் தெரியவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment