நாமல் குமார பொலிஸ் உளவாளி: ராஜித! - sonakar.com

Post Top Ad

Thursday, 20 September 2018

நாமல் குமார பொலிஸ் உளவாளி: ராஜித!மைத்ரி - கோத்தாவை கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கியுள்ள நாமல் குமார ஒரு பொலிஸ் உளவாளியென தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

குறித்த நபர் இதற்கு முன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொலிசாருக்கு உளவுத் தகவல் வழங்கி அதன் மூலம் கொடுப்பனவுகள் பெற்று வந்துள்ளதாகவும் திகன வன்முறை சம்பவத்தைப் பற்றியும் உளவுத் தகவல் வழங்கிய போதும் அதற்கான கொடுப்பனவு பற்றி பொலிசார் இன்னும் தீர்மானிக்கவில்லையெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.சமூக மட்டத்தில் இவ்வாறு பல தனி நபர் மற்றும் சமூக அமைப்புகளையும் பொலிசார் உளவாளிகளாக பயன்படுத்தி வருகின்றமையும் இஸ்லாமிய தஃவா இயக்கம் எனும் பெயரில் இயங்கி வரும் அமைப்பொன்றும் தேசிய உளவுத்துறைக்கு தகவல் வழங்கி வந்தமை குறித்து கடந்த காலத்தில் ராஜித தகவல் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment