குவைத் தம்பதிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை - sonakar.com

Post Top Ad

Sunday 16 September 2018

குவைத் தம்பதிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைசெல்லப்பிராணியை நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததன் பின்னணியில் சுங்க அதிகாரிகளுடன் முறுகலில் ஈடுபட்ட குவைத் தம்பதியினருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஜுலை மாதம் இடம்பெற்ற சம்பவத்தில் கைதான இருவருக்கும் முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினர் இருவரும் சுங்க அதிகாரிகளுடன் தர்க்கம் செய்த அதேவேளை அவர்களே அதிகாரிகளைத் தாக்கியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சமூக வலைத்தளங்களில் வெளியான முழுமையான காணொளியில் குவைத் நபர் சராமரியாகத் தாக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையின் காரணமான செல்லப்பிராணியும் நாட்டை விட்டுக் கொண்டு செல்ல மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment