அழிந்து கொண்டிருந்த UNPக்கு உயிரூட்டியது தவறு என்கிறார் ஹக்கீம்! - sonakar.com

Post Top Ad

Sunday 12 August 2018

அழிந்து கொண்டிருந்த UNPக்கு உயிரூட்டியது தவறு என்கிறார் ஹக்கீம்!


மாகாண சபை தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஒரே தளத்தில் இருக்கும் ஆட்சியின் பங்காளிகள் தம்மை எதிரிகளாக பார்ப்பதாகவும் சினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் இன்று பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர் தெரிவிக்கிறார் மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம்.


அட்டாளைச்சேனையில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முதற் தடவையாக உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டோம். இதன்மூலம் அழிந்துபோயிருக்கின்ற ஒரு கட்சிக்கு உயிரூட்டுகின்ற ஒரு வேலையை பார்த்துவிட்டோமா என்று சிந்திக்கத் தூண்டுகிறது. அது மாத்திரமின்றி அழிந்து போயிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இன்றும் தலைதூக்கி ஆடிக்கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்க வாழ்நாள் ஜனாதிபதியாவதற்கு ஏதுவாக 18ம் திருத்தச் சட்டத்தை ஆதரித்து முஸ்லிம் கட்சிகள் வெகுமானங்களை அடைந்து மகிழ்ந்திருந்த நிலையில் மைத்ரி அலையின் போது தாம் முன்னர் 'தவறிழைத்து' விட்டதாக ரவுப் ஹக்கீம் தெரிவித்திருந்தமையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உயிரூட்டியது தவறு என கருதும் ரவுப் ஹக்கீம் அதே கட்சியின் சார்பிலேயே கண்டியில் பொதுத் தேர்தலில் போட்டியிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.


1 comment:

mohamed said...

கிழக்கில் ஒரு பேச்சு , மேற்கில் வேறு பேச்சு ; தில் இருந்தால் , பொது தேர்தலில் கண்டியில் மரத்தில் வருவாரா ? U N P இன் காலம் முடிய போகிறது , இனி வெல்வது கடினம் , / ரிஷாட் வந்து U N P யை வலு படுத்திய பின் கடைசியாக தானே வந்தார் , முதலில் பாய களம் தேடுகிறாரோ , அரசியல் வாதி மறந்து விடுவான் , மக்கள் தேர்தலில் பார்த்துக்கொள்வார்கள்

Post a Comment