அமைச்சு கண்காணிப்பு MPக்களின் சலுகையை நிராகரித்த மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Wednesday 8 August 2018

அமைச்சு கண்காணிப்பு MPக்களின் சலுகையை நிராகரித்த மைத்ரி!


அமைச்சுப் பணிகளை கண்காணிக்கவென அண்மையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம், ஊழியர்கள் மற்றும் வாகனம் வழங்க முன் வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை நிராகரித்துள்ளார் இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.கண்காணிப்பு MPக்களுக்கு ஒரு அலுவலகம், ஏழு ஊழியர்கள் மற்றும் அமைச்சு வாகனம் ஒன்றை வழங்குவதற்கான பரிந்துரையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு சர்ச்சை நிலவி வருகின்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடரப்படும் அடிப்படை உரிமை வழக்குகளில் செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என மலிக் சமரவிக்ரமவினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment