'மோட யக்கா' பொது இடத்தில் முன்னாள் MP யைத் திட்டிய மஹிந்த! (video) - sonakar.com

Post Top Ad

Saturday 18 August 2018

'மோட யக்கா' பொது இடத்தில் முன்னாள் MP யைத் திட்டிய மஹிந்த! (video)


பொது இடங்களில் பிறரை அசிங்கமாகத் தூற்றுவதில் பெயர் வாங்கியிருந்த மேர்வின் சில்வா நாடாளுமன்ற விவாதத்தின் போது சக உறுப்பினர் ஒருவரை 'மோட மூசலயா' என திட்டிப் பிரபலமடைந்திருந்தார்.


இந்நிலையில், நேற்றைய தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்தவின் பிரத்யேக செயலாளருமான உதித லொக்குபண்டாரவை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மஹிந்த ராஜபக்ச மோட யக்கெக் என திட்டியதுடன் அவரை அங்கிருந்து நகரும் படி தெரிவித்த காணொளி வெளியாகி பேசு பொருளாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னருகில் வந்த ஒருவரின் கையை முறுக்கி மஹிந்த சர்ச்சையில் சிக்கியிருந்தமை நினைவூட்டத்தக்க அதேவேளை நேற்றைய தினம் சி.ஐ.டியினரால் மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment