
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் மஹிந்த ராஜபக்சவிடம் வெள்ளியன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடாத்தவிருக்கும் விசாரணை திட்டமிடப்பட்ட நாடகம் என தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.
கூட்டாட்சியின் 3 வருடங்கள் நிறைவு பெற்ற பின்னர் அடுத்தடுத்து தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மஹிந்தவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் இது ஏலவே திட்டமிட்ட நாடகம் எனவும் இன்று இடம்பெற்ற கூ.எ செய்தியாளர் சந்திப்பில் வைத்து செஹான் சேமசிங்க தெரிவித்திருந்தார்.
இன்னும் புதிய நாடகங்களை அரசு அரங்கேற்றவுள்தாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment