
மைத்ரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க தேனிலவு முறியும் கட்டத்தை அண்மித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராவதில் மைத்ரிக்கு எந்த ஆட்சேபனையுமில்லையென தெரிவிக்கிறார் வாசுதேவ நானாயக்கார.
ரணிலும் மைத்ரியும் தற்சமயம் தனித்தனியாக தம்மைப் பிரபலப்படுத்தி, நியாயப் படுத்தும் போட்டியில் களமிறங்கியுள்ளதாக தெரிவுக்கும் வாசுதேவ, இந்நேரத்தில் மைத்ரிக்கு இருக்கும் சிறந்த தெரிவு பிரதமர் பதவியை மஹிந்தவுக்கு வழங்கவதே எனவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், செப்டம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் தனக்கு நம்பிக்கையில்லையெனவும் வாசு மேலும் தெரிவித்துள்ளமையும் அவ்வார்ப்பாட்டத்தைத் தலைமை தாங்கும் பொறுப்பு நாமலிடம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment