திருமலை: மீன்பிடி தடை நீக்கத்தை அமுல்படுத்த உத்தரவு - sonakar.com

Post Top Ad

Wednesday 8 August 2018

திருமலை: மீன்பிடி தடை நீக்கத்தை அமுல்படுத்த உத்தரவுபாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் முயற்சியால் திருகோணமலை மாவட்டத்தில் ஏழு கிலோமீட்டர் எல்லைக்குள் மீன்பிடிக்க விதிக்கபட்டிருந்த தடையை மூன்று மாதத்துக்கு நீக்கி அக்காலப்பகுதிக்குள் நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தருவதாக கடந்த மாதம் அமைச்சர் கூறியிருந்தார்.

இந்த தடை நீக்கத்துக்கான அமைச்சரின் கடிதம் திருகோணமலை மீன்பிடி திணைக்கள பிரதிப்பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் அவர் இதை நடைமுறைப்படுத்தாமல் தொடச்சியாக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.இதனால் இன்று திருகோணமலை மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடல்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினார்.இக்கலந்துரையாடலில் மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் நாயகமும் கலந்துகொண்டார்.

இக்கலந்துரையாடலில் கீழ்க் காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன

1-மீன்பிடி தடை நீக்கத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டார்.இதற்கான கடிதம் விரைவில் திருகோணமலை மாவட்ட கடல்தொழில் திணைக்கள பிரதி பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
2-இந்த பிரட்சினைக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள தேசிய நீர்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமையிடம் (NARA) அறிக்கை ஒன்றை மீனவர்களின்பங்களிப்புடன் ஒருமாதத்தில் தயாரித்து அமைச்சரிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மேற்கொள்ளும் இந்த தொழிலை தடை செய்யவும் இந்த அனுமதியை ரத்து செய்யவும் சில இனவாத குழுக்கள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறுப்பிடத்தக்கது.

-SM Sabry

No comments:

Post a Comment