வெலிகடை: பெண் கைதிகள் கூரையில் ஏறி போராட்டம்! - sonakar.com

Post Top Ad

Monday, 13 August 2018

வெலிகடை: பெண் கைதிகள் கூரையில் ஏறி போராட்டம்!


File photo

தம்மைப் பிணையில் விடுவிக்கக் கோரி, பெண் கைதிகள் குழுவொன்று வெலிகடை சிறைச்சாலை கூரைப்பகுதியில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் 15-20 பெண்கள் இவ்வாறு பிணை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொரளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற கைதிகள் ஆர்ப்பாட்டம் ஒன்று ஈற்றில் பாரிய கொலைச் சம்பவமாக மாறியிருந்ததுடன் அது தொடர்பான விசாரணையும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment