ஓட்டமாவடி: பொது மக்கள் - பொலிசாரிடையே முறுகல் - sonakar.com

Post Top Ad

Thursday 2 August 2018

ஓட்டமாவடி: பொது மக்கள் - பொலிசாரிடையே முறுகல்


ஓட்டமாவடி பிரதேசத்தில் பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முருகல் நிலை சுமுகமாக முடிவடைந்துள்ளதாக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெருமுன தெரிவித்தார்.


ஓட்டமாவடி பிரதேசத்தில் மட்டக்களப்பு மோட்hர் போக்குவரத்து பொலிஸார் கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அவரை மோட்டார் சைக்கிளால் அடித்து விட்டு சென்ற வேளை எதிரே நின்ற பொலிஸார் இளைஞரை மறித்த போது பதட்டத்தில் எதரிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதுன்ட இளைஞன் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் அடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை உழவு இயந்திரத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் கொண்டு செல்வதற்கு பொலிஸார் முயற்சித்த வேளை உழவு இயந்திர சாரதி மற்றும் பணியாளர் மற்றும் அங்கு கூடிய பொதுமக்கள் அதற்கு மறுத்த போது ஏற்பட்ட வாய்தகராறு பெறும் முருகல் நிலையை தோற்றுவிக்கும் நிலை ஏற்பட்டது இதனையடுத்து பொலிஸாரின் தலையீட்டால் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இச் சம்பவத்தில் காயமடைந்த மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் டபள்யூ.பி.ஞானஸ்ரீ மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை ஹூதா பள்ளிவாயல் வீதியை சேர்ந்த முஹம்மது லத்தீப் சியாம் ஆகிய இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-அனா

No comments:

Post a Comment