இம்ரான் கான் பதவியேற்பு: முன்னாள் இந்திய கிரிக்கட் வீரர்களுக்கு அழைப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 2 August 2018

demo-image

இம்ரான் கான் பதவியேற்பு: முன்னாள் இந்திய கிரிக்கட் வீரர்களுக்கு அழைப்பு!

qmQUNe5

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் அணித் தலைவரும் சர்வதேச கிரிக்கட் நட்சத்திரமுமான இம்ரான் கான் அண்மையில் பாகிஸ்தான் பிரதமராகத் தெரிவாகியுள்ள நிலையில் அவரது பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள முன்னாள் இந்திய கிரிக்கட் அணியின் தலைவர்கள் சுனில் கவஸ்கர், கபில் தேவ் மற்றும் நவ்ஜாத் சிங் சிது ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அத்துடன் பிரபல இந்திய நடிகர் அமீர் கானுக்கும் இம்ரான் கானின் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தான் பதவியேற்றதும் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதுடன் பாகிஸ்தானில் வறுமையொழிப்புக்காகப் பாடு படப் போவதாக வாக்குறுதியளித்துள்ள இம்ரான் கானே, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய திடகாத்திரமுள்ள அரசியல் தலைவராக பாக் இளைஞர் சமூகம் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றது.

இதேவேளை 2015ல் ஏகப்பட்ட 'நல்லாட்சிக்கான' வாக்குறுதிகளுடன் பதவியேற்ற மைத்ரி - ரணில் கூட்டரசு தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது தத்தளித்துக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment