ரோஹிங்ய 'இன அழிப்பு': இராணுவ உயரதிகாரிகளை விசாரிக்க பரிந்துரை! - sonakar.com

Post Top Ad

Monday, 27 August 2018

demo-image

ரோஹிங்ய 'இன அழிப்பு': இராணுவ உயரதிகாரிகளை விசாரிக்க பரிந்துரை!

AR53bRp

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மியன்மார் இராணுவத்தினால் நடாத்தப்பட்ட பாரிய இன அழிப்பினை விசாரிக்க வேண்டும் என இவ்விவகாரத்தை விசாரணை செய்து வரும் ஐ.நா மனித உரிமை செயற்பாட்டாளர் குழு பரிந்துரைத்துள்ளது.



இராணுவத்தினரின் திட்டமிட்ட நடவடிக்கையை 'இன அழிப்பு' என சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையினால் நியமிக்கப்பட்டிருந்த மூவர் கொண்ட  விசாரணையாளர் குழு  தாம் கண்டறிந்துள்ள விவகாரத்தை முதற்கட்ட அறிக்கையாக சமர்ப்பித்துள்ளதுடன் இராணுவ முக்கியஸ்தர்களை இன அழிப்பின் கீழ் விசாரிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.. 

கடந்த வருடம் இடம்பெற்ற பாரிய இழ அழிப்பு நடவடிக்கையினால் சுமார் 7 லட்சம் ரோஹிங்யர்கள் மியன்மாரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment