இன அழிப்பு விசாரணைக்கு இணங்க மறுக்கும் மியன்மார்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 August 2018

இன அழிப்பு விசாரணைக்கு இணங்க மறுக்கும் மியன்மார்!


கடந்த வருடம் சுமார் 7 லட்சம் ரோஹிங்யர்களை விரட்டியடித்து மியன்மார் இராணுவம் நடாத்திய இன வெறியாட்டத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஊடாக விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு இணங்க முடியாது என மறுப்பு வெளியிட்டுள்ளது அந்நாட்டு அரசு.ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு தமது நாட்டுக்குள் வரக் கூட அனுமதிக்கப்படாத நிலையிலேயே அறிக்கை வெளியாகியுள்ளதுடன் இன அழிப்பு என சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் அதற்குத் தாம் இணங்கப் போவதில்லையெனவும் மியன்மார் அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

விரட்டப்பட்ட ரோஹிங்யர்கள் பங்களதேஷ் எல்லையில் தஞ்சம் புகுந்துள்ள அதேவேளை முதற்தடவையாக மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கை ஐ.நாவின் அங்கமான மனித உரிமைகள் பேரவையினால் இன அழிப்பென சித்தரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment