கா'குடி: மதீனா இஸ்லாமிய பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 30 August 2018

கா'குடி: மதீனா இஸ்லாமிய பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் தஃவா அமைப்பான லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசத்திலிருந்து சவூதி அரேபிய நாட்டின் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மௌலவி அல்ஹாபிழ் எஸ்.முபாறக் (பலாஹி),மௌலவி ஆர்.சனூஸ் (மனாரி) ஆகியோரை கௌரவித்து பாராட்டி வழி அனுப்பும் நிகழ்வு 28 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மஃஹதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி வளாகத்தினுள் இடம்பெற்றது.லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டு மாணவர்களை கௌரவித்து பாராட்டி வழி அனுப்பும் நிகழ்வில் லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் உப செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.ஜிப்ரி (மதனி),பொருளாளர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.பீ.எம். அன்சார் ( மதனி ), காத்தான்குடி மஃஹதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ. ஸைனுலாப்தீன் (மதனி) உட்பட லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மௌலவி அல்ஹாபிழ் எஸ்.முபாறக் (பலாஹி),மௌலவி ஆர்.சனூஸ் (மனாரி) ஆகியோர் லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் மதனி, மஃஹதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ. ஸைனுலாப்தீன்  மதனி ஆகியோரினால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-பழுலுல்லாஹ் பர்ஹான்

No comments:

Post a Comment