அடுத்த 'வெசக்' வருவதற்குள் அரசு கவிழும்: பந்துல சூளுரை! - sonakar.com

Post Top Ad

Saturday, 25 August 2018

அடுத்த 'வெசக்' வருவதற்குள் அரசு கவிழும்: பந்துல சூளுரை!


அடுத்த வெசக் போயா தினத்துக்குள் அரசாங்கம் கவிழும் என மீண்டும் சூளுரைத்துள்ளார் பந்துல குணவர்தன.ஹோமாகமயில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிகழ்வில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், மஹிந்த தலைமையில் புதிய அரசு நிறுவப்படும் எனவும் சூளுரைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஐக்கிய தேசியக் கட்சி இடையிலான ஒப்பந்தம் நிறைவுற்றிருந்த நிலையில் இவ்வருட முற்பகுதியிலேயே ஆட்சி கலையும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்து வந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment