முடிவுக்கு வந்தது பெண் கைதிகளின் கூரைப் போராட்டம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 14 August 2018

முடிவுக்கு வந்தது பெண் கைதிகளின் கூரைப் போராட்டம்!


வெலிகடை சிறைச்சாலையில் நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டு தமது வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதாகவும் பிணை  மறுக்கப்படுவதாகவும் தெரிவித்து அதனை எதிர்த்து கூரை மேல் ஏறி பெண் கைதிகள் ஆரம்பித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.


நீதியைமைச்சின் விசேட பிரதிநிதிகள் குழு அங்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் இவ்வழக்குகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுக்குள் கருத்து வேறுபாட்டினால் ஏற்பட்ட மோதலில் நால்வர் சிறு காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment