வலுக்கும் அமெரிக்கா - துருக்கி 'பொருளாதார' போர்! - sonakar.com

Post Top Ad

Wednesday 15 August 2018

வலுக்கும் அமெரிக்கா - துருக்கி 'பொருளாதார' போர்!


துருக்கியின் நாணயம் இவ்வருடம் 42 வீத வீழ்ச்சியைக் கண்டுள்ள நிலையில் அந்நாட்டின் பொருளாதாரம் அண்மைய அமெரிக்க நடவடிக்கைகளால் தடுமாற்றத்தைக் கண்டு வருகிறது.இந்நிலையில், அமெரிக்க இறக்குமதிகளுக்கு இன்று புதன்கிழமை புதிய வரிகளை அறிவித்துள்ளது துருக்கி. அமெரிக்க வாகனங்கள், மது பானம், அரிசி,  கரி மற்றும் அழகு சாதன பொருட்களுக்கு இவ்வாறு மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு பதிலாக கொரிய தயாரிப்புகளை ஊக்குவிக்கப் போவதாக அறிவித்திருந்த மறு நாள் துருக்கியில் கைது செய்யப்பட்டிருக்கும் அமெரிக்க பாதிரியாரை விடுவிக்கக் கோரி, பதில் நடவடிக்கையாக துருக்கியின் முக்கிய ஏற்றுமதி வர்த்தகத்துக்கு கடுமையான வரி விதித்து பொருளாதார சிக்கலொன்றை ட்ரம்ப் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment