கஃபாவுக்கான புதிய 'கிஸ்வா' கையளிப்பு! - sonakar.com

Post Top Ad

Monday 13 August 2018

கஃபாவுக்கான புதிய 'கிஸ்வா' கையளிப்பு!


அரபாவுடைய தினத்தில் மாற்றப்படும் 'கிஸ்வா' என அறியப்படும் கஃபாவின் போர்வை நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

துல் ஹஜ் மாதம் ஞாயிற்றுக்கிழமை (11) ஆரம்பமாகியுள்ள (சவுதியில்) நிலையில் அரபாவுடைய தினத்தில் இவ்வருடாந்த நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இடம்பெறுவது வழக்கம். 



கிஸ்வா தயாரிப்புக்கு சுமார் 170 கலைஞர்களின் பல மாத உழைப்பு மற்றும் தரமான பட்டு, உலோகங்களும் பயன்படுத்தப்படுவதுடன் நான்கு பக்கங்கள் மற்றும் கதவுப் பகுதிக்கான பிரத்யேக போர்வையாக ஐந்து துண்டுகளாக கிஸ்வா தயாரிக்கப்படுகிறது.

ஓகஸ்ட் 21ம் திகதி இவ்வருடம் சவுதி உட்பட பெரும்பாலான நாடுகளில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் ஓகஸ்ட் 20ம் திகதியே அரபாவுடைய தினமாகும். இந்நாளிலேயே கிஸ்வா மாற்றமும் இடம்பெறும். 

எனினும், இங்கையில் 22ம் திகதியே பெருநாள் என்பதால் 21ம் திகதியே அரபாவுடைய தினம் அமைவதுடன் அவ்வேளையில் ஏலவே கிஸ்வாவும் மாற்றப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment