அடம் பிடிக்கும் ஞானசார: சிறைச்சாலையில் மீண்டும் ஜம்பர் சர்ச்சை! - sonakar.com

Post Top Ad

Friday, 31 August 2018

அடம் பிடிக்கும் ஞானசார: சிறைச்சாலையில் மீண்டும் ஜம்பர் சர்ச்சை!


சத்திர சிகிச்சை முடிந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள ஞானசார, அங்கு தனது காவியுடையைக் களைந்து சிறைச்சாலை சீரூடையை அணிய மறுத்து அடம்பிடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அனைத்து கைதிகளும் சிறைச்சாலை சீரூடையை அணிய வேண்டும் என கடந்த தடவை நீதியமைச்சர் தலதா அத்துகோறள திட்டவட்டமாக தெரிவித்திருந்த போதிலும் மறு நாளே ஞானசார பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மகாநாயக்கர்கள் கட்டளையிட்டால் மாத்திரமே தான் காவியுடையைக் களையமுடியும் என ஞானசார தெரிவித்துள்ளதுடன் சிறைச்சாலை நிர்வாகம் அமைச்சு மட்டத்தில் ஆலோசித்து வருவதாக  தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment