சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு 'சுதந்திரம்' இல்லை: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday 10 August 2018

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு 'சுதந்திரம்' இல்லை: மஹிந்த


சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கியுள்ள போதிலும் அவை சுதந்திரமாக இயங்க முடியாமல் தவிப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


தாம் ஆட்சியமைத்தால் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கப்போவதாக வாக்களித்திருந்த ரணில் - மைத்ரி கூட்டாட்சி அதற்கேற்ப சுயாதீன ஆணைக்குழுக்களை அறிவித்திருந்தது. எனினும், அவை சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பல தீர்மானங்களை நிறைவேற்ற முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது அர்த்தமற்றது என மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment