பாதாள உலகை 'இப்படி'க் கட்டுப்படுத்த முடியாது: பொன்சேகா! - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 July 2018

பாதாள உலகை 'இப்படி'க் கட்டுப்படுத்த முடியாது: பொன்சேகா!


பாதாள உலகைக் கட்டுப்படுத்துவதற்கு தீர்க்கமானதும் உறுதியானதுமான நடவடிக்கை அவசியம் என தெரிவிக்கின்ற சரத் பொன்சேகா, தற்போதைய நடவடிக்கைகள் வெற்றியளிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார்.


தினசரி கொலைகள், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையிலேயே சம்பந்தப்பட்ட அமைச்சர் இதய சுத்தியுடன் செயற்படுவதாக இருந்தால் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க முடியும் எனவும் தற்போதைய எதிர் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லையெனவும் பொன்சேகா மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment