என்னை யாராலும் அசைக்க முடியாது: ஹிருனிகா - sonakar.com

Post Top Ad

Thursday 5 July 2018

என்னை யாராலும் அசைக்க முடியாது: ஹிருனிகா


ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தன்னைத் துரத்துவதற்கான சதி இடம்பெறுவதாகவும் அத்தனை எளிதில் தன்னை யாரும் அசைக்க முடியாது எனவும் தெரிவிக்கிறார் ஹிருனிகா பிரேமசந்திர.மக்கள் பணி செய்யாத யாருக்கும் தான் பதவிகளை வழங்க மறுப்பதே தன் மீதான குற்றச்சாட்டெனவும் ஒரு போதும் அச்சுறுத்தல்களுக்குத் தான் அடிபணியப் போவதில்லையெனவும் ஹிருனிகா மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த ஹிருனிகா இரத்மலான தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அதேவேளை தொடர்ந்தும் அவருக்கு கட்சி மட்டத்தில் எதிர்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment