கண்டி: பேராதனை பல்கலை மாணவர்கள் டயர் எரித்து ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Thursday, 26 July 2018

கண்டி: பேராதனை பல்கலை மாணவர்கள் டயர் எரித்து ஆர்ப்பாட்டம்


வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரிச்சுமை மற்றும் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்து பேராதனை பல்கலை மாணவர்கள் இன்று கண்டி நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.


பேராதனை பல்கலையிலிருந்து கண்டி நகருக்கு நடைபவனியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டி நகரில் வைத்து டயர் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

கல்வித்துறை வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-மொஹொமட்  ஆஸிக்

No comments:

Post a Comment