மரண தண்டனையை அமுல் படுத்தியே தீருவேன்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Saturday 21 July 2018

மரண தண்டனையை அமுல் படுத்தியே தீருவேன்: மைத்ரி


மனித உரிமை அமைப்புகள், ஐரோப்பிய யூனியன் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வெளியாகியுள்ள போதிலும் மரண தண்டனையை அமுல் படுத்துவதில் தான் திடமாக உள்ளதாக தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.பொலன்நறுவயில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல், வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமையும் எவ்வித எதிர்ப்பு வந்தாலும் தான் திடமாக உள்ளதாக மைத்ரி தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment