இஸ்ரேலின் கபளீகரத்துக்குள் காஸா! - sonakar.com

Post Top Ad

Thursday 19 July 2018

இஸ்ரேலின் கபளீகரத்துக்குள் காஸா!



உலகளவில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் கொல்லப்படுவதற்கும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகவும், விலங்கினங்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும், எதிராகவும் குரல் கொடுக்கின்ற, சட்டம் வகுகின்ற உலக ஆட்சியாளர்களும், அமைப்புக்களும் கொலை வெறி பிடித்த இஸ்ரேல் படைகளினால் காலத்திற்குக் காலம் பலஸ்தீனத்தின் நிலபுலங்களையும் அப்பாவி பலஸ்தீன சிறுவர்கள் உட்பட பெண்களையும் கொண்டழிப்பதைத்  தடுப்பததற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை. 


ஒரு சில நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதற்காக வரிந்துகட்டிக்கொண்;டு அவற்றிற்காகச் செயற்படுகின்ற, அறிக்கைளை விடுகின்ற மனித உரிமை அமைப்புக்கள் பலஸ்தீனச் சிறுவர்களினதும், மக்களினதும்; உரிமைகளை மீறி ஒட்டுமொத்த காஸாவையும் கபளீகரம் செய்வதற்கு முயற்சித்துக் கொண்டு வரும்  இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டும் காணமல் செயற்படுகின்றன. 

சர்வதேச சட்டங்களும,; மனித உரிமைகள் அமைப்புக்களும் மௌனித்திருக்கும் நிலையில், வந்தேறு குடிகளான இஸ்ரேலிய கல்நெஞ்சம் கொண்ட  கொலை வெறியர்களினால் வளரும் பஞ்சிளம் பாலகர்களும், சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும், முதியவர்களும் கொல்லப்படுவதையும் காஸாவின் நிலங்கள் அங்குலமங்குலமாக பறிக்கப்படுவதையும் தடுப்பதற்கு நாடுகளுக்கிடையிலான சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஐ.நா.வும் அதன் பாதுகாப்புச் சபையும் அவற்றின் அதிகாரங்களை இஸ்ரேல் அரசுக்கு எதிராக முழுமையாகப் பிரயோகிக்காமல் இருப்பது ஏன்? 

அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் வளர்ப்புப் பிள்ளையான இஸ்ரேல் காலம் காலமாக பலஸ்தீன மக்களைப் பந்தாடி வருவதை உலகின்; ஜனநாயக அரசுகள் பார்வையாளர்களாக தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்கப்போகிறதா? என்ற கேள்விகளை மனிதாபிமானம் உள்ள மானிட வர்க்கம் எழுப்புகின்ற போதிலும், இஸ்ரேல் படைகளின் உயிர் அறுவடைக் காணொளிகளை  ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றபோதிலும,; உலக சமாதானத்திற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா.வும் அதன் அமைப்புக்களும் இன்னுமே இஸ்ரேல் முன்னெடுக்கும் அத்துமீறல்களுக்கும் உயிர் அறுவடைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. 

இந்நிலையில்தான் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவை இஸ்ரேலுக்கெதிரான தமது நடவடிக்கை குறித்து கடந்த மாதம் பிரசாபித்தவேளை அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அமெரிக்கா ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடாந்து நிலைத்திருக்க வேண்டுமாயின் மத்திய கிழக்கில் வந்தேறுகுடியாக வந்தமர்ந்து இன்று முழு மத்திய கிழக்கிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இஸ்ரேல் பலமுள்ளதாக இருக்க வேண்டும். 

இஸ்ரேலின் பலம்தான் அமெரிக்கா தனது ஆதிக்கத்ததை மத்திய கிழக்கின் மீது பிரயோகிப்பதற்கும் மத்திய கிழக்கில் தொடர்ந்து அமைதியின்மை ஏறபடுத்துவதற்கும் இலகுவாக அமையும். கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளில்; ஏற்பட்ட அமைதியின்மைக்கு திரைமறைவில் செயற்பட்டது உலக பொலிஸ்காரன் என அழைக்கப்படும் அமெரிக்காதான் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈராக் மீதான படையெடுப்பு முதல் ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகர் எனப் பிரகடனப்படுத்தியது வரை மத்திய கிழக்கின் வரலாற்று நெடுங்கிலும் அமைதியின்மையை அமெரிக்கா வலிந்து உருவாக்கியிருக்கிறது என்பதை அரபுலகில்; இடம்பெற்று வருகின்ற வன்முறைகளையும் அவற்றின் அழிவுகளினதும்; பின்னணிகளைக் கொண்டு உணர்ந்து கொள்ள முடியும். 

மத்திய கிழக்கில் இயங்கும் பல்வேறு கிளர்ச்சிக்குழுக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுதங்களை விற்பனை செய்தும் ஆயுங்களை வழங்கியும் முஸ்லிம்களை முஸ்லிம்களோடு மோதவிட்டு இன அழிப்புச் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் திட்ட வரிசையில் ஒன்றாக சிறிது காலம் அமைதியாக இருந்த பலஸ்தீன் மண்ணில் மீண்டும் இஸ்ரேல் மூலம் இன அழிப்புச் செய்யும் நடவடிக்கைக்கு உந்து சக்தி வழங்கப்பட்டிருக்கிறது அந்த உந்து சக்தியின் ஒரு வெளிப்பாடே ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த மே மாதம் ஜெரூசலம் நகரில் அமெரிக்க தூதரகம் துறக்கப்பட்டதாகும்.

உலக நாடுகளின் எச்சரிக்கைiயும் மீறி, பல தசாப்பதங்களாக அமெரிக்கத் தலைவர்கள் கடைபிடித்து வந்த  பலஸ்தீன் தொடர்பான கொள்கைகளையும் புறந்தள்ளி கடந்த வருடம் டிசம்பர் 6ஆம்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலமென அறிவிக்கப்பட்டு கடந்த மே மாதம் ஜெரூசலத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நாள் முதல் காஸா மக்களினால் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டங்களைக் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உகல அரங்கிற்கு தமது ஊடகப் பயங்கரவாத்தின் ஊடாகப் புலப்படுத்தி வரும் இஸ்ரேலியப் படையினர் அப்பாவி மக்களின் உயிர்களைக் காவுகொண்டு வருகின்றனர் என்பதே உண்மை.

இஸ்ரேலின் வரலாற்று நெருக்குவாரங்கள்

1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி அமெரிக்க மற்றும் பிரித்தானிய வல்லரசுகளின் அழுத்தங்களின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையினால் சட்ட விரோதமாக அரபு மண்ணில் ஸ்தாபிக்கப்பட்ட இ;ஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் நெருக்குவாரங்கள்;  வரலாற்று நெடுங்கிலும் பலஸ்தீன மண் மீதும் மக்கள்; மீதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

பலஸ்தீன் மீதான ஆக்கிரப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு தொடங்கிய 1948ம் ஆண்டு  முதல் இற்றை வரையான 69 வருட காலப்பகுதியில் பல்லாயிரக்காணக்கான இன்னுயிர்களின் உதிரங்களினால் பலஸ்;தீன மண் செந்நிறமாக்கப்பட்டிருக்கிறது. கோடானகோடி சொத்தழிவுகளை அம் மண் இழந்துள்ளது.

1948 முதல் 1949 வரையான ஒரு வருட காலப் பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடி, அட்டூழிய தாக்குதல்;  நடவடிக்கைகளி;ன் காரணமாக பலஸ்தீனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிர் இழந்தும், 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்; காயமும்;பட்டனர். இவ்வாறு உயிர் இழந்த, காயப்பட்டவர்களில் அதிகமானோர் சிறுவர்களாவர்.

இந்நிலையில்தான், ஜேர்த்தானினாலும் எகிப்தினாலும் ஆளப்பட்ட பஸ்தீனத்தின் மேற்குக்கரையும் காஸாவும் இணைந்ததாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி அரபு லீக்கினால் பலஸ்தீன் அரசாங்கம் பிரகடனப்படுத்தப்பட்டது. அரபு தேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல,; 69 வருட காலப் பகுதியில் 275 தடவை பலஸ்தீன் மீது தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

பலஸ்தீன மண்ணில் வாழும் பலஸ்தீனர்களையும், இஸ்லாமிய அடையாளங்களையும் அழித்துவிட்டு முழு காஸா உட்பட முழு பலஸ்தீன மண்ணையும் கபளிகரம் செய்ய முயற்சிக்கும் இஸ்ரேல், போராட்ட வரலாறுகளை மறந்து செயற்படுகிறது. தேச விடுதலைக்காக போராடுகி;ன்றவர்களை அடியோடு அழித்த வரலாறு இந்ந பூமியில் இல்லை. விடுதலைக்காகப் போராடும் இனத்தின் ஒரு உயிர் வாழும் வரை இன அழிப்பாளர்களுக்கெதிரான போராட்டம் தொடரத்தான் செய்யும். 

பலஸ்தீனத்தின் எதிர்கால சந்ததிகளான சிறுவர்களையும், இளைஞர்களையும் அறுவடை செய்துவிட்டு காஸா உள்ளிட்ட மொத்த பலஸ்தீனத் தேசத்தையும்  கபளிகரம் செய்யும் நடவடிக்கைகளை மிக வேகமாக இஸ்ரேல் முன்நகர்த்தி வருகிறது.

1967ஆம் ஆண்டு பலஸ்தீனத்தின் காஸா மேற்குக்கரையையும் கிழக்கு அல்குத்ஸுiயும் ஆக்கிரமித்து கபளீகரம் செய்ததுடன் சர்வதச அங்கீகாரமின்றி கிழக்கு குத்ஸும் இஸ்ரேலால் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆக்கரமிக்கப்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோத குடியிருப்புக்களை இஸ்ரேல்  அமைத்து வகிறது. இதுவரை 600,000 இலட்சம் இஸ்ரேலியர்கள் இக்குடியிருப்புக்களில் வசித்துவருவதாக சர்வதே ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் இஸ்ரேலின் திட்டமிடல் மற்றும் கட்டடக் குழு மேலும் ஆறு புதிய குடியேற்றங்களை கபளீகரம் செய்யப்பட்ட பிரதேசங்களில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக சர்வ  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


பலஸ்தீன மண்ணை மாத்திரமின்றி மண்ணின் மைந்தர்களையும் காவுகொள்ளும் இனவெறியில் இஸ்ரேல் செயற்பட்டு வருவதை இஸ்ரேலிப் படைளின்; துப்பாக்கி சன்னங்களுக்கு பலியாகும் சிறுவர்களின் காட்சிகள் புடம்போடுகின்றன. 

இஸ்ரேலின் பிடிக்குள் பலஸ்தீனச் சிறுவர்கள்

1948ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டிலும் அல்லது ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின்போது 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 6000க்கும் மேற்பட்டடோர் காயமுமடைந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 200 பேர் சிறுவர்களாகவும் காயப்பட்டவர்களிலும் அதிகளவிலானோர் சிறுவர்களாகவுமே இருந்தனர். 

ஒவ்வொரு வருடத்திலும் இஸ்ரேலினால் பலஸ்தீன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது உயிர் இழந்தவர்களின், காயப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீதத்தினர் சிறுவர்கள்தான். இவ்வாறு சிறுவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களின் பின்னணியில் ; பலஸ்தீன எதிர்கால சந்ததியினர்களான சிறுவர்களை அழிக்கும் இஸ்ரேலின் சதித்திட்டம் புலப்படுகிறது.

அரேபிய முஸ்லிம்களின் அமைதிப்பூங்காவாக விளங்கிய பலஸ்தீனத் தேசத்தில் பலாத்காரமாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல், பலஸ்தீன் மீது தொடர்சியாக அழுத்தங்களை பல்வேறு வழிகளிலும் மேற்கொண்டு வந்தது. இதனால் பலஸ்தீன மக்களின் தொழில், கல்வி, பொருளாதார, சுகாதார, வாழ்வாதார நடவடிக்கைகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன. 

இஸ்ரேலின் நிலப்பரப்பிலிருந்து காஸாவுக்குக் கிடைக்கின்ற மனிதாபிமான அடிப்படைத் தேவையாகிய நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் என்பவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் படிப்படியாகக் குறைத்து வந்துள்ளது. இதனால் பலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது. 

2007ஆம் ஆண்டில் காஸாவில் 95 வீதமான தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. 3,900 தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த 35ஆயிரம் பலஸ்தீனிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால்  2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் காஸாவில் 40க்கும் 80க்கும் இடைப்பட்ட வீதத்தினர் தொழிலற்றவர்களாகக் காணப்பட்டனர். அத்Nதூடு காசாவிலும், மேற்குக்கரையிலும் நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு சட்டவிரோத குடியிருப்புக்களை தொடர்ச்சியாக இஸ்ரேல் இன்று வரை முன்னெடுத்து வருகிறது.

இஸ்ரேலின் நெருக்குவாரங்களும், அட்டூழியங்களும்,; தாக்குதல்களும் தரை, கடல், வான் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1967முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 1987ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்  இஸ்ரேலியர்களினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,978 ஆகும். இதில் 1,620 பேர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள்.

2007ஆம் ஆண்டில் பலஸ்தீன சனத்தொகையில 17 வீதத்தினர் 5 வயதுக்குக் குறைந்தவர்கள.; 46 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்கள். காஸாவின்; 1.7 மில்லியன் சனத்தொகையில் 8 இலட்சம் பேர் சிறுவர்களாவர். எதிர்கால பலஸ்தீன சந்ததிகளின் வளர்ச்சி, அதிகரிப்பு இஸ்ரேலுக்கு பெரிய சவாலாகவே உள்ளது. அதனால் பாடசாலைகளையும், பாடசாலை செல்லும் மாணவர்களின் பஸ்களையும் விளையாட்டு மைதானத்தில் விளையாடும் சிறுவர்களையும் தமது கொடூர தாக்குதல்களின் ஊடாக கொண்டழித்து வருகிறது இஸ்ரேல் என்பதை மறுக்க முடியாது.

ஐ.நா.வின் சிறுவர்களுக்கான அமைப்பின் தகவல்களின் பிரகாரம். 2013ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஒரு தசாப்த காலப் பகுதிக்குள் 12 வயதுக்கு குறைவான 7,000 பலஸ்தீனச் சிறுவர்கள் இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 12 முதல் 17 வயதுக்குட்ட 7,000 சிறுவர்கள் இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யப்படுவதாக சர்வதேச ஆய்வறிக்கைகள்; சுட்டிக்காட்டுகின்றன.

சர்வதேச சிறுவர் உரிமைகளுக்கான சட்டங்களையும் மீறி கைது செய்யப்பட்ட சிறுவர்களுக்கெதிராக போலிக் குற்றச்சாற்றுக்களைச் சுமத்தி நீதி மன்றங்களினால் தீர்ப்புகளையும் இஸ்ரேலிய இரும்பு இதயம் கொண்ட  இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது.

கைது செய்வதும,; கொண்டழிப்பதும் என சிறுவர்களை இழக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலஸ்தீன எதிர்கால சந்ததி அந்த மண்ணில் வாழக்கூடாது என்ற இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவாகப் புலப்படுத்துகின்றது. சிறுவர்கள் உலகில் மிகவும் பாதுகாப்பாக வாழ்வதற்காக   ஐ,நா.வினால் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் பட்டயத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களும் சிறுவர் உரிமைகளை மீறுவோறுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் எந்தளவு தூரத்தில் பலஸ்தீன சிறுவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பிலும் கைது செய்யப்படுவது தொடர்பிலும் கொல்லப்படுவது தொடர்பிலும் செயற்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறியதாகும்.

இஸ்ரேலின் அக்கிரமங்களினால் பலஸ்தீனத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சிறுவர்களை வாழ விடாது அவர்களை வளர விடாது அழிப்பதன்; பின்னணி என்ன?  என்பதற்கான விடையினை மிக வெளிப்படையாகவே இஸ்ரேலிய ஆட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் கடந்த காலங்களில்; இஸ்ரேலிய ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர். 

இது தவிர, காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேலின் அத்துமீறல்களும் தாக்குதல்களும் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது மனவடு உளநோயினால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களைப் பாதிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டும் சர்வதேச ஆய்வறிக்கைகள் காஸாவில் 54 வீதமான சிறுவர்களும் மேற்குக் கரையில் 43 வீதமான சிறுவர்களும் இந்த உளப்பிரச்சினையினால் பாதிப்படைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

வரலாற்று நெடுங்கிலும் தொடரும் இஸ்ரேலின் நெருவாரங்களும் தாக்குதல்களும் சிறுவர்களிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014 ஜுலை மாதம் இஸ்ரேலிய சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு அதற்கு பலி தீர்க்கும் திட்டத்திற்கேற்ப பலஸ்தீன சிறுவன் கடத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டும் 3 பலஸ்தீன சிறுவர்கள் சுட்டும்  கொல்லப்பட்டனர். 

அதைத் தொடர்ந்து  உருவெடுத்த போரானது 2000க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களைக் அவ்வாண்டில் காவுகொண்டது. இதில் 500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலியெடுக்கப்பட்டார்கள். பாலகர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் என  1000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாவும் ஆக்கப்பட்டனர்.

அத்தோடு, பள்ளிவாசல்கள், குடியிருப்புக்கள், தொழில் நிறுவனங்கள் பொருளாதார மையங்கள், எரிபொருள் நிலையங்கள், மின்சார நிலையங்கள் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் என பல இடங்கள் அழிக்கப்பட்டு பலஸ்தீன் மக்கள் சகலவற்றிலும் முடமாக்கப்பட்டனர். இவ்வாறு காஸா மற்றும் மேற்குக்கரையில் இஸ்ரேலின் கொடூர படைகளின் துப்பாக்கி சன்னங்களுக்கு 2015ல் 200க்கு மேற்பட்ட பலஸ்தீனர்களும் 2016ல் 100க்கு மேற்பட்டவர்களும் பலியாக்கப்பட்டிருக்கிறார்கள்.

காஸாவின் சமகாலம்

முழு காஸாவையும் கவளீகரம் செய்யும் இலக்கை அடைவதற்காக காலத்திற்குக் காலம் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமையும் காஸா பிராந்தியத்தில்  உக்கிர வான் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதனால் பல சிறுவர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.
காஸா பிராந்தியத்தில் ஹமாஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன்  முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வான்தாக்குதல்கள் கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னரான மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கை என சர்வதேச ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலினால் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதிலும், ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள்  தொடருமெனவும், பலஸ்தீனர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவரை  போராட்டங்கள் தொடாந்து முனனெடுக்கப்படுமெனவும், இத்தாக்குதல்களினால் பலஸ்தீனர்களை அடிபணியச் செய்ய முடியாது எனவும் ஹமாஸ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் முழுக் காஸாவையும் காவுகொல்லும் இலக்குடன் காஸா பள்ளத்தாக்குடனான தனது பொருட்களை கொண்டு செல்வதற்கான கடவையினை இஸ்ரேல் மூடியமையை ஐ.நா. சபை கடுமையாக விமர்சித்துள்ளதுடன் இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் காஸாவை இஸ்ரேல் கபளீகரம் செய்யாமலிருப்பதற்காக வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக! 

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment