அரசாங்கத்தின் செயற்பாடுகளை முற்றாக முடக்கும் வகையில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கிறார் கூட்டு எதிர்க்கட்சியின் வாசுதேவ நானாயக்கார.
பல்வேறு பொது சேவை நிறுவனங்கள் ஊடாக தொடர் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவிக்கின்ற அதேவேளை ஓகஸ்ட் 17ம் திகதி கொழும்பில் கூ.எ பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அடைவதற்கு மஹிந்த அணி மேற்கொண்ட எந்த முயற்சியும் கை கூடாத நிலையில் எப்படியாயினும் அரசை செயலிழக்க செய்வதென கூட்டு எதிர்க்கட்சி தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment