புதிய அரசியலமைப்பு இனி வெறும் 'கனவு' : மனோ! - sonakar.com

Post Top Ad

Wednesday 25 July 2018

புதிய அரசியலமைப்பு இனி வெறும் 'கனவு' : மனோ!


புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது இனி வெறும் கனவாகிவிட்டது என தெரிவிக்கிறார் அமைச்சர் மனோ கணேசன்.

அதனை சாத்தியப்படுத்துவதற்கான காலம் கடந்து விட்டதாக தெரிவிக்கும் அவர், கூட்டாட்சியின் முதல் வருடத்திலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மஹிந்த மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றக் களமிறங்கியுள்ள நிலையில் பிரதமர் ஆட்சியின் கீழான புதிய அரசியலமைப்புத் திட்டத்தை கூட்டாட்சியினர் இழுபறிக்குள்ளாக்கியுள்ளதுடன் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தலே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டாட்சி அரசில் நிறைவேற்றப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்துக்கமைய மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment