நாட்டின் இறையான்மையை விற்க முனைந்த மஹிந்த: கபீர்! - sonakar.com

Post Top Ad

Friday, 20 July 2018

நாட்டின் இறையான்மையை விற்க முனைந்த மஹிந்த: கபீர்!


தனது தேர்தல் செலவுக்காக சீனாவிடம் ஆறு மில்லியன் டொலர் லஞ்சம் பெற்று, மஹிந்த ராஜபக்ச நாட்டின் இறையான்மையை விற்று தரம் தாழ்த்தியிருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் கபீர் ஹாஷிம்.


லஞ்சத்தைத் தான் பெற்றுக்கொண்ட மஹிந்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு டொலருக்கு சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்ய இணங்கியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆட்சி மாறியதால் குறித்த திட்டம் பலிக்கவில்லையெனவும் நாடு காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த குறித்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் நாடாளுமன்றில் இவ்விடயம் குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் மஹிந்த ராஜபக்ச சமூகமளிக்கத் தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment