சுதந்திரத்தை இழக்கப் போகிறீர்கள்: மைத்ரியின் எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 July 2018

சுதந்திரத்தை இழக்கப் போகிறீர்கள்: மைத்ரியின் எச்சரிக்கை!


கூட்டாட்சியில் ஊடக சுதந்திரம் தாராளமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தம்மை இலக்கு வைத்து ஊடக தாக்குதல் இடம்பெறுவதாக தெரிவிக்கின்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, எல்லை மீறிய செயற்பாடுகள் மூலம் தற்போது இருக்கும் சுதந்திரத்தை இழந்து பின் நாளில் அழ வேண்டாம் என எச்சரித்துள்ளார்.


தம் மீதான சேறு பூசல் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் தற்போதிருக்கும் ஊடக சுதந்திரத்தை முற்றாக இழந்து விட நேரிடும் என்பதையும் மறக்க வேண்டாம் என மைத்ரி மேலும் தெரிவிக்கிறார்.

மைத்ரிபால சிறிசேன ஆட்சி மூன்று வருடங்களைத் தாண்டியுள்ள நிலையில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை குறித்து தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment