லண்டனில் இருந்த வேளை தனக்கும் தன் புதல்விக்கும் எதிராக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஏற்று நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் மோசடி விவகாரத்தில் நவாஸ் ஷரீப் தனது பதவியை இழந்ததுடன் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஜுலை 25ம் திகதி பாகிஸ்தானில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இம்ரான் கானின் கட்சி முன்னிலை வகிப்பதாகவும் இவ்வேளையில் ஷரீப் குடும்பம் நாடு திரும்பி தண்டனையை ஏற்றுக்கொள்வதன் மூலமே சமாளிக்க முடியும் எனும் சூழ்நிலையில் நவாஸ் ஷரீபும் அவரது புதல்வி மரியமும் இன்று நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment