மஹிந்தவை பிரதமராக்க வாசுவிடம் புதிய 'பொறிமுறை'! - sonakar.com

Post Top Ad

Monday, 9 July 2018

மஹிந்தவை பிரதமராக்க வாசுவிடம் புதிய 'பொறிமுறை'!


ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவது நாட்டுக்கு மாத்திரமனிற் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்துக்கும் அவசியமானது என தெரிவிக்கிறார் வாசுதேவ நானாயக்கார.


எனவே, மைத்ரிபால சிறிசேனவும் இதன் தேவையுணர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கும் வாசுதேவ தாம் புதிய பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளதாகவும் அதன் மூலம் மஹிந்தவை பிரதமராக்க முடியும் எனவும் தெரிவிக்கிறார்.

இதனடிப்படையில் நாடாளுமன்ற பெரும்பான்மையை கூட்டு எதிர்க்கட்சி பெற்றுக்கொள்ளும் வகையில் கூட்டாட்சி முதலில் கலைக்கப்பட வேண்டும் எனவும் அதன் பின் நாடாளுமன்ற பெரும்பான்மையை இலகுவாகப் பெற்று மஹிந்தவை பிரதமராக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment