டுபாய்: 2 கோடி ரூபா நீல வைரத்தை திருடிய இலங்கையர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday, 28 July 2018

டுபாய்: 2 கோடி ரூபா நீல வைரத்தை திருடிய இலங்கையர் கைது!


டுபாயில் பணப்பரிமாற்ற நிலையம் ஒன்றில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் அங்கிருந்து 2 கோடி ரூபா பெறுமதியான நீல வைரம் ஒன்றைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த மே மாதம் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து குறித்த வைரத்தை திருடிய இலங்கையர், அதனைக் காலணியொன்றுக்குள் மறைத்து வைத்து இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட டுபாய் பொலிசார் தற்போது அதனை மீட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வைரத்தைக் கடத்தியதும் நாட்டை விட்டு வெளியேறவிருந்த திட்டம் பிழைத்த நிலையில் அமீரகத்தில் தலைமறைவாக இருந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment