வரவு 12 லட்சம் - செலவு 25 கோடி: சம்பிக்கவின் மத்தள கணக்கு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 July 2018

வரவு 12 லட்சம் - செலவு 25 கோடி: சம்பிக்கவின் மத்தள கணக்கு!


மத்தள விமான நிலையத்தின் மாதாந்த வருமானம் 12 லட்சம் எனினும் பராமரிப்பு செலவு 25 கோடியாக இருப்பதால் இதனால் பெரு நஷ்டத்திலேயே இயக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சுர் சம்பிக்க ரணவக்க.


நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இதற்கு 800 ரூபா பங்களிப்பதாகவும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருமானமும் மத்தள பராமரிப்புக்காக செலவிடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே விமான நிலையத்தின் உரிமையைத் தக்க வைத்துக் கொண்டு அதன் செயற்பாடுகளை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக சம்பிக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment