
சித்தி லெப்பை ஆய்வுப் பேரவையின் முதலாவது தேசிய ஆய்வு மாநாடு, எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில், இம்மாநாட்டில் "நமது முஸ்லிம் நேசன்" எனும் தலைப்பில் சிறப்பு மலரொன்றும், குறித்த பேரவையினால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இச்சிறப்பு மலருக்கான ஆய்வுக் கட்டுரைகளை, ஆய்வறிஞர்கள் ஆய்வுப் பேரவைக்கு அனுப்பி வைக்க முடியும். ஆய்வறிஞர்கள், அறிஞர் சித்தி லெப்பையுடன் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை, கணணிப் பதிவில் ஏ - 4 தாளில் 5 பக்கங்களுக்கு மேற்படாமலும் 3 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்கத்தக்கதாக, எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பிவைக்க வேண்டும். தரமானதாகக் கருதப்படும் கட்டுரைகள் மாத்திரம், ஆய்வுக் குழுவினரால் பிரசுரிப்பிற்காகத் தெரிவு செய்யப்படும்.
"பொதுச் செயலாளர், சித்தி லெப்பை ஆய்வுப் பேரவை, இல. 16, 7 ஆவது ஒழுங்கை, கவுடான புறோட்வே, தெஹிவளை" ( General Secretary, Siddi Lebbe Research Forum, No. 16, 7th Lane, Kawdana Broadway, Dehiwala ) என்ற முகவரிக்கு, ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைக்குமாறும், சித்தி லெப்பை ஆய்வுப் பேரவை கோருகின்றது.
-ஐ. ஏ. காதிர் கான் / Photo: Ashraff A Samad
No comments:
Post a Comment