
ஒரு புறத்தில் பேச்சுவார்த்தை மற்றும் டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பு ஏற்பாடு என பரபரப்பை உருவாக்கியிருக்கின்ற அதேவேளை மறுபுறத்தில் தென் கொரியாவுடன் இணைந்து இராணுவ பயிற்சியை அமெரிக்கா தொடரும் நிலையில் தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை இடை நிறுறுத்துவதாக அறிவித்துள்ள வடகொரியா, ட்ரம்ப் சந்திப்பையும் ரத்து செய்யப் போவதாக எச்சரித்துள்ளது.
தம்முடன் நட்புறவைக் காட்டுவது போல் நடிக்கும் அமெரிக்கா, இன்னொரு பக்கத்தில் வடகொரியாவைத் தூண்டும் வகையில் பேசி வருவதாகவும் அணு ஆயுதங்களை முற்றாக கை விட வேண்டும் எனும் கோரிக்கை முன் வைக்கப்பட்டால் பேச்சுவார்த்தையில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லையெனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எப்பாகத்தையும் அழிக்கக்கூடிய ஆயுத தயாரிப்பில் வடகொரியா வெற்றி கண்ட பின்னர் அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடர்பில் பேசத் தொடங்கியுள்ள அதேவேளை பிராந்தியத்தில் தொடர்ந்தும் இராணுவ அச்சுறுத்தலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment