சவுதி: WWEஐத் தொடர்ந்து ஜேர்மனியுடன் இணைந்து இசை நிகழ்ச்சி - sonakar.com

Post Top Ad

Saturday 28 April 2018

சவுதி: WWEஐத் தொடர்ந்து ஜேர்மனியுடன் இணைந்து இசை நிகழ்ச்சி


முன் கூட்டியே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் WWE மல்யுத்த நிகழ்வினைத் தொடர்ந்து ஜேர்மனி கூட்டில் சவுதி தலை நகர் ரியாதில் விசேட ஜாஸ் இசை நிகழ்ச்சியொன்றும் இடம்பெற்றுள்ளது.மிதவாத கொள்கைக்கு மாறப் போவதாக அறிவித்திருந்த சவுதி அரேபியாவில் தற்போது பல்வேறு  மேற்குலக பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்ற வருகின்றன. இதன் தொடர்ச்சியிலேயே ஜேர்மனிய இசைக்கலைஞர்களுடன் இணைந்து ஜாஸ் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

நிகழ்வுக்கு 60,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சவுதி வீரர்களும் அதில் கலந்து கொண்டுள்ளதுடன் பெண்களும் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment