UK: முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி! - sonakar.com

Post Top Ad

Monday 16 April 2018

UK: முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி!


பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஐக்கிய இராச்சியம் சென்று தற்போது லண்டனில் தங்கியிருக்கும் ஜனாதிபதி நாளைய தினம் அங்குள்ள முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம் நடாத்த வேண்டும் எனும் கோரிக்கையும் எழுப்பப்பட்டிருந்த நிலையில் முதற் கட்டமாக ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து புலம் பெயர்ந்து வாழும் நிலையில் தாய் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் தமது கவலையை வெளியிட்டு ஜனாதிபதியிடம் பதிலை எதிர்பார்க்கும் முயற்சியின் கட்டமாக ஒரு சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.



இச்சந்திப்பின் போது, ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கப்பெறாதவிடத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் புலம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழக்கம் போல முஸ்லிம்களில் எப்போதும் இரண்டு தரப்பு இருப்பதாகவும் போட்டியிருப்பதாகவும் காட்டுவதற்காக லண்டன் இலங்கைத் தூதரகத்தால் திட்டமிட்டு நடாத்தப்பட்டு வரும் பினாமி அமைப்புடனும் 20 நிமிட சந்திப்பொன்றை ஜனாதிபதி நிகழ்த்தி 'முஸ்லிம்களின்' இரு தரப்புகளை  சந்தித்ததாக தகவல் பதிவு உருவாக்கப்படவுள்ளது.

மார்ச் மாதம் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்திருந்த நிலையிலும் அதற்கு முதல் நாள் குறித்த பினாமி அமைப்பின் உறுப்பினர்களை தூதரகத்துக்குள் அழைத்துப் பேசி, முஸ்லிம்களுக்குள் பிளவு இருப்பதாக லண்டன் தூதரகம் சுட்டிக்காட்ட முனைந்திருந்தமையும் தற்போது இதற்கான பொறுப்பதிகாரியாக முஸ்லிம் ஒருவரே தூதரகத்தில் கடமையாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment