
நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் ககூட்டமைப்பினர் முன் வைத்த 10 கோரிக்கைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியிருப்பதானது இரு தரப்புக்குமிடையில் 'டீல்' இடம்பெற்றிருப்பதை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்துள்ள ஜி.எல். பீரிஸ், இது பாரிய வின் விளைவுகளை உருவாக்கும் என தெரிவிக்கிறார்.
டீலின் அடிப்படையில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் 65 ஏக்கர் நிலம் உரியவர்களுக்கு விடுவிக்கப்படும் அதேவேளை வடபகுதி மாவட்ட செயலகங்களில் தமிழரை நியமிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எந்த இனத்தவரும் நாட்டின் எப்பகுதியிலும் பணியாற்றலாம் என்ற சுதந்திரத்துக்கு இச்செயல் மாற்றமானது என ஜி.எல். தெரிவிக்கிறார். எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குப் போன்று 'பண' டீல் குற்றச்சாட்டுகள் எதுவும் முன் வைக்கப்படவில்லையென்பதும் தமது மக்களின் அபிலாசைகளை இவ்வாறான சந்தர்ப்பங்களில் பதவிகளைப் பெறாத தமிழ் அரசியல் தலைமைகள் பெற்றுக் கொள்வதும் சுட்டிக்காட்டத்தக்க விடயங்களாகும்.
அம்பாறை மாவட்டத்திலும் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லையென நீண்ட நாட்கள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதுவரை பொது நலன் அடிப்படையிலான டீல்களை பேச முஸ்லிம் கட்சிகள் திராணியற்று இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment