நிந்தவூர்: அல் அஷ்ரக் OBA மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி - sonakar.com

Post Top Ad

Wednesday 18 April 2018

நிந்தவூர்: அல் அஷ்ரக் OBA மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி



19 அணிகள் கலந்து கொண்ட நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு  2010 மற்றும் 2004ம் ஆண்டு அணிகள் தெரிவாகின. இப்போட்டியானது நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை மைதானத்தில் 15.04.2018 ல் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற 2010 அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. இச்சுற்றுப் போட்டியில் 2010 ஆண்டு அணி கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அணித்தலைவர் JM. இன்பாஸ் களத்தடுப்பினையே தெரிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது. 


முதலில் துடுப்பெடுத்தாடிய 2004ம் ஆண்டு அணியினர் 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 48 ஓட்டக்கங்களை பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2010ம் ஆண்டு அணியின் சார்பாக ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கிய A. அதுஹருல் ஹக் மற்றும் SHS. ஹகீமுல்லாஹ் ஆகியோரின் நிதானமான சிறந்த துடுப்பாட்டத்தின் காரணமாக எந்தவித விக்கெட் இழப்புக்களும் இன்றி 3.4 ஓவர்கள் முடிவில் சம்பியன் பட்டத்தினை தனதாக்கி கொண்டனர்.

இச்சுற்றுப் போட்டியில் 2010 ஆண்டு அணி கலந்து கொண்ட போட்டிகளில் ஆட்ட நாயகன்களாக MMM றுசைட்(முதலாவது போட்டி), JM. இன்பாஸ் (காலிறுதிப் போட்டி) SHS. ஹகீமுல்லாஹ் (அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அனைத்து வீரர்களும் சிறந்த களத்தடுப்பினை மேற்கொண்டிருந்ததோடு H. அம்ஜத் அலி, AM. பர்ஹான் ஆகியோரின் சிறந்த பந்து வீச்சு திறமையினை வெளிப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

2010ம் ஆண்டு அணிக்கான சகல பொருளாதார உதவிகளையும் 2010ம் ஆண்டு மாணவர்களால் கடந்த 8 வருட காலமாக நடாத்தப்பட்டு வரும் PRF சமூக சேவை அமைப்பின் விளையாட்டுத் துறை பொறுப் பேற்றுக் கொண்டமையும குறிப்பிடத்தக்கதாகும்.

-சமீன் முஹம்மது சஹீத்

No comments:

Post a Comment