ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவிக்கு அகில! - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 April 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவிக்கு அகில!


ஐக்கிய தேசியக்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் புதிய பதவிகளுக்கான பெயர்களை முன் மொழிந்துள்ளது அதனைப் பொறுப்பேற்ற புதிய குழு.இதனடிப்படையில் செயலாளர் பதவிக்கு அகில விராஜ் காரியவசத்தின் பெயர் முன் மொழியப்பட்டுள்ள நிலையில், தவிசாளராக கபீர் ஹாஷிம்,  தேசிய அமைப்பாளராக நவின் திசாநாயக்க, பொருளாளராக ஹர்ஷ டிசில்வா ஆகியோருடன் பிரதி செயலாளர் பதவிக்கு ருவன் விஜேவர்தனவும் முன்மொழியப்பட்டுள்ளனுர்.

இதேவேளை சஜித் மற்றும் ரவி கருணாநாயக்கவின் பதவிகளுக்கு மாற்றுப் பெயர்கள் அறிவிக்கப்படாத நிலையில் செயற்குழு இந்நியமனங்களை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment