சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து ஒட்டு மொத்தமாக விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது அக்கட்சியின் இளைஞர் அணியான ஜனநாயக இளைஞர் இணையம்.
அமைச்சர் பதவியைப் பெற்ற பின் சமூகத்துக்குப் பயனில்லாத வகையில் தன்னிச்சையாக செயற்பட்டு வரும் மனோ கணேசனின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற நிலையிலேயே இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோ கணேசனின் எதோச்சாதிகாரப் போக்கினால் சில காலங்களாக நிலவி வந்த உட்கட்சி முரண்பாடு வலுத்ததன் பின்னணியில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்திய இளைஙர் அணியினர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment