லண்டனை அதிர வைக்கும் தொடர் கொலைகள்! - sonakar.com

Post Top Ad

Tuesday 3 April 2018

லண்டனை அதிர வைக்கும் தொடர் கொலைகள்!


நியுயோர்க் நகரை மிஞ்சிய கொலைக் கலாச்சாரம் லண்டனில் தலைவிரித்தாடி வரும் நிலையில் நேற்றிரவும் 17 வயது இளம் பெண் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டொட்டன்ஹம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை கிழக்கு லண்டன், வோல்தம்ஸ்டோவில் மேலும் ஒரு 16 வயது இளைஞன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ள அதேவேளை 15 வயது சிறுவன் ஒருவன் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.இதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிரான துண்டுப் பிரசுர அச்சுறுத்தலொன்று மூலம் முஸ்லிம் சமூகமும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் அசிட் வீச்சு சம்பவம் ஒன்றும் அண்மையில் ஷெபீல்ட் பகுதியில் கத்திக் குத்து சம்பவம் ஒன்றும் முஸ்லிம் விரோத சம்வங்களின் தொடர்ச்சியில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment