பேருவளை ஜாமிஆ நளீமிய்யா புதிய மாணவர் அனுமதி - sonakar.com

Post Top Ad

Saturday, 14 April 2018

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா புதிய மாணவர் அனுமதி



பேருவைளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு 2018ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் எதிர்வரும் 17ஆம் 18ஆம் 19ஆம் திகதிகளில் காலை எட்டு மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ள. எழுத்துப் பரீட்சையில் மாணவரின் மொழித் திறன், பொது அறிவு, விவேகம் என்பன பரீட்சிக்கப்படும்.


நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் வடக்குவட மத்தியவட மேல் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 17.04.2018 ஆம் திகதி செவ்வாய்க் கிழமையும் மத்தியசப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18.04.2018 ஆம் திகதி புதன் கிழமையும்
தெற்குஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 19.04.2018ஆம் திகதி வியாழக் கிழமையும்நடைபெறவுள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 0342276338, 0776504765, 0773573815ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரிதெரிவித்துள்ளார்.

-ஜெம்ஸித் அஸீஸ்

No comments:

Post a Comment