ஈரான் சபாநாயகர் இலங்கை வருகை - sonakar.com

Post Top Ad

Sunday, 15 April 2018

demo-image

ஈரான் சபாநாயகர் இலங்கை வருகை

8eCmYNT

சிரியா சூழ்நிலை தொடர்பாக தமது நட்புறவு நாடுகளுடன் கலந்துரையாடி தெளிவு படுத்தும் முயற்சியிலிறங்கியுள்ள ஈரான் இலங்கை மற்றும் வியட்னாமுக்கு சபாநாயகர் அலி லரிஜானி தலைமையிலான குழுவொன்றை அனுப்பவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.



சர்வதேச உறவுக மற்றும் கூட்டுறவு வர்த்தக மேம்படுத்தல் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இப்பயணம் இடம்பெறுகின்ற அதேவேளை அமெரிக்க தரப்பு சர்வதேச விதிமுறைகளை மீறியமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய அரசுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment