குவைத் - பிலிப்பைன்ஸ் முறுகல்; தூதரை வெளியேற பணிப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday 25 April 2018

குவைத் - பிலிப்பைன்ஸ் முறுகல்; தூதரை வெளியேற பணிப்பு!


குவைத் தூதரகத்தின் செயற்பாடுகளின் அதிருப்தியின் பின்னணியில் கடந்த வாரம் முதல் எதிர் நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வந்த குவைத், தமது நாட்டிலிருந்து குவைத் தூதரை வெளியேற பணித்துள்ளதுடன் தமது தூதரை பிலிப்பைன்சிலிருந்து நாடு வந்து சேர அழைப்பாணையும் விடுத்துள்ளது.


தூதரக அதிகாரிகளின் வரம்பு மீறிய செயற்பாடு மற்றும் கருத்துக்களின் பின்னணியில் தோன்றிய முறுகல் தொடர்பில் பிலிப்பைன்ஸ் நேற்றைய தினம் மன்னிப்புக் கோரியிருந்தது.

தமது நாட்டின் பணிப்பெண்களை பல வீடுகளிலிருந்து 'காப்பாற்றியதாக' தெரிவிக்கும் பிலிப்பைன்ஸ் தூதரகம் குவைத் பொலிசாரை மீறி நேரடியாக செயற்பட்டது தொடர்பிலேயே முறுகல் தோன்றியிருந்தது. இந்நிலையில் குவைத் தூதரை வெளியேறப் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment