தாக்குதல் நடாத்தியது சரியே: சவுதி - பஹ்ரைன் வரவேற்பு! - sonakar.com

Post Top Ad

Saturday 14 April 2018

தாக்குதல் நடாத்தியது சரியே: சவுதி - பஹ்ரைன் வரவேற்பு!


சிரிய இராணுவ நிலைகள் மீது அமெரிக்க கூட்டணி தாக்குதல் நடாத்தியது சரியே என வரவேற்பை வெளியிட்டுள்ளன சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன்.


1990 முதல் அமெரிக்க தலையீட்டினால் அரபுநாடுகள் சின்னாபின்னப்படுத்தப்பட்டு உள்நாட்டு யுத்தங்களால் சிதைந்து வருகின்றன. இந்நிலையில் சிரியா விடயத்தில் ரஷ்ய தலையீடு கள நிலவரத்தை மாற்றியமைத்த போதிலும் நேற்றைய தினம் இரவு திடீர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் எதிர்ப்பு நிலைப்பாட்டைக்கொண்டுள்ள சவுதி மற்றும் பஹ்ரைன் இதனை வரவேற்றுள்ள அதேவேளை மத்திய கிழக்கில் ரஷ்யா - ஈரான் மறுபுறத்தில் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியில் தற்போது கட்டாரும் சவுதி கூட்டணியால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் ஈராக், லிபியா, சிரியா வரிசையில் கட்டாரும் சிதைவுறும் என அவதானிகள் எச்சரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment