ஊடகங்களுக்கு எதிரான வன்முறைக்கு இடமில்லை: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Friday 6 April 2018

ஊடகங்களுக்கு எதிரான வன்முறைக்கு இடமில்லை: மைத்ரி


கடந்த ஆட்சியில் போன்று ஊடகங்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகளை தமது அரசு அங்கீகரிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


ஊடக செயற்பாடுகளின் எல்லையைத் தாண்டி, குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு ரங்கா போன்றவர்களைக் கொண்டு குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும் சிரச அண்மையில் இடம்பெற்ற கண்டி வன்முறைகளை முழுமையாக இருட்டடிப்பு செய்திருந்தது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பாரிய பிரச்சாரத்தைக் கொண்டு சென்று அக்கட்சி ஆதரவாளர்களின் அதிருப்தியையும் குறித்த நிறுவனம் சம்பாதித்துக் கொண்டது. இதன் பின்னணியில் நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் குறித்த நிறுவனத்தின் முன் சென்று பெருமளவு பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment