சிரியாவை மையமாகக் கொண்டு அமெரிக்கா - ரஷ்யா 'வார்த்தைப்' போர்! - sonakar.com

Post Top Ad

Tuesday 10 April 2018

சிரியாவை மையமாகக் கொண்டு அமெரிக்கா - ரஷ்யா 'வார்த்தைப்' போர்!


சிரிய சிவில் யுத்தம் அந்நாட்டின் அரசுக்கு சாதகமான நிலையை எட்டியுள்ள நிலையில் அங்கு மீண்டும் உக்கிர நிலையைத் தோற்றுவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்கா விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறது.

எனினும், சிரிய அரசுக்கு ஆதரவாக கள நிலையைமை மாற்றியமைக்க உதவிய ரஷ்யா, அமெரிக்கா திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் அவசியமற்ற சூழ்நிலையை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.


சதாம் ஹுசைனிடம் பேரழிவை உருவாக்கும் ஆயுதங்கள் இருப்பதாக அந்நாட்டைத் தாக்கியழித்து சின்னாபின்னமாக்கிய அமெரிக்கா, சிரியாவில் இரசாயன தாக்குதல் எனும் தலைப்பில் பல தடவைகள் அங்கு யுத்த மேகத்தை உருவாக்கி வருகிறது. இதேவேளை ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவுடன் மீண்டும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள சிரிய அரசு கிளர்ச்சியாளர்களையும் அவர்களது ஆதரவுத் தளங்களையும் தாக்கி வருகிறது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிரிய பகுதியில் அமெரிக்கா நிலை கொள்வதனை அனுமதிக்க முடியாத ரஷ்யா தமது நலன் காக்க அங்கு நிலை கொண்டுள்ளதுடன் வான் தாக்குதல்களையும் நடாத்தி கள நிலவரத்தை மாற்றியமைத்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள கிளர்ச்சிப் படைகளுக்கான ஆயுத விநியோகம் மற்றும் உதவிகளையும் நிறுத்திக் கொண்ட அமெரிக்கா தற்போது நேரடி தாக்குதலுக்குத் தயாராகி வருவதை அவதானிக்க முடிகிறது.

இதற்கிடையில் இரசாயன தாக்குதல்  சந்தேகத்தை அடிப்படையாக வைத்து இஸ்ரேல் அவ்வப்போது திடீர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment